பாலம் கட்டும்போது எடுக்கப்பட்ட கற்குவியலால் ஆபத்து! அகற்ற வேண்டி பொதுமக்கள் கோரிக்கை!!

    -MMH 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி, ஈரோடு மாவட்டம் பாசூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 2006 -ம் ஆண்டு நீர்மின்நிலையம் மற்றும் பெரிய வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. 

அப்போது காவிரி ஆற்றுக்குள் இருந்த பாறைகளை உடைத்து காவிரி ஆற்றுக்குள் மழை போல் குவியல் குவியலாக போட்டனர். இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் காவிரி ஆற்றுக்குள் மலை போல் குவிந்து கிடக்கும் கற்களை அகற்றாமல் அப்படியே வைத்துள்ளனர். 

இந்த கருங்கற்கள் மலை போல் குவிந்து கிடப்பதால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது தண்ணீர் காவிரி ஆற்றில் வேகமாக செல்ல முடியாமல் சோழசிராமணி காவிரி கரையோரம் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். 

எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காவிரி ஆற்றுக்குள் மலை போல் குவிந்து கிடக்கும் கருங்கற்களை ஏலம் விட்டு அகற்ற வேண்டும் என சோழசிராமணி பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ரஞ்சித் குமார், திருச்செங்கோடு.

Comments