கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மக்கள் சங்கமம் மாநாடு!!

  -MMH 

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்றது. மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற பிரச்சாரம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இந்தியா முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கரும்புகடை சாரமேடு பகுதியில் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, பேரணி மற்றும்  மக்கள் சங்கமம் என்ற தலைப்பில் மக்கள் திரள் மாநாடு நடைபெற்றுது.

கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  தொண்டாமுத்தூர் தெற்கு  டிவிஷன் சார்பாக நடைபெற்ற இதில்  டிவிஷன் தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமை தாங்கினார்.

இம்மாநாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் முஹம்மது சேக் அன்சாரி,ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ,எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் ஃபாரூக்,நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் யாஸ்மின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இம்மாநாட்டில் பெண்கள், குழந்தைகள், ஜமாத்தார்கள், முஹல்லாவாசிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநாட்டை ஒட்டி நடந்த கட்டுரை போட்டி ஓவியபோட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

- சீனி,போத்தனூர்.

Comments