சில்மிஷ பேராசிரியர் மீண்டும் கல்லூரியில்! போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற பேராசிரியர்கள்!!

     -MMH 

கோவையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரமேஷ். இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் ஒன்றை பேராசிரியை ஒருவர் முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி விசாரிக்கப்பட்ட நிலையில் சிவகாசிக்கு உதவி பேராசிரியர் ரமேஷ் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பல்வேறு வகைகளில் செல்வாக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதைப் பயன்படுத்தி மீண்டும் கோவை அரசு கலைக் கல்லூரிக்கு பணிமாறுதல் பெற்று வந்திருக்கிறார்.

இது சக பேராசிரியைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உதவி பேராசிரியர் ரமேஷின் அத்துமீறல்கள் குறித்து கல்லூரி முதல்வர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவில் பேராசிரியைகள் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த சூழலில் நேற்றைய தினம் திடீர் போராட்டத்தில் கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியைகள், ஆசிரியைகள் குதித்தனர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பணி புறக்கணிப்பு செய்து விட்டு, கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் கழக தலைவர் வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை அரசு கலைக் கல்லூரி வாயிலில் நின்று கொண்டு, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான உதவி பேராசிரியரை கல்லூரி முதல்வர் காப்பாற்ற நினைக்கிறார் என்று குற்றம்சாட்டினர்.

இதையொட்டி தொடர்ச்சியாக கோஷங்கள் எழுப்பினர். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதுபற்றி பேசிய கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் வீரமணி, விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்த பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. உடனே விசாரணைக்கு வர வேண்டும். இல்லையெனில் புகார் நிராகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

விசாகா கமிட்டி யாரென்றே தெரியாமல் கடிதம் வழங்கியுள்ளனர். அப்படியென்றால் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணை பொய்யான விசாரணையா? எது உண்மை. பாலியல் தொல்லைக்கு ஆளான ஆசிரியைக்கு நீதி வேண்டும். உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். முக்கியமாக பேராசிரியைகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி. ராஜேந்திரன்.

Comments