ஒட்டப்பிடாரம் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு!!

 -MMH 

ஒட்டப்பிடாரம் அருகே கீழவேலாயுதபுரம் பகுதியில் பணியின் போது மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சையில்  இருந்த மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை ஒட்டப்பிடாரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பொன்னையா மகன் மாரியப்பன் (53) மின்வாரியத்தில் வேலை செய்து வந்துள்ளார் .அதேபோல் தூத்துக்குடி அத்திமரப்பட்டியை சேர்ந்த முத்தையா மகன் ஜெயராமன் (55) மின்வாரிய ஊழியராக வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில்  கடந்த ஜூலை 30  அன்று கீழ வேலாயுதபுரம் தனியார் மின் ஆலை அருகே மேற்குப் பகுதியில்  230 கேவி மின்பாதை அருகே உள்ள கருவேலி மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர் அப்போது எதிர்பாராத விதமாக மின்வயரில் கருவேலி மரங்கள் பட்டு இருவரும் காயம் அடைந்தனர். இதை அடுத்து  அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 இதில் மாரியப்பன்  மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலையில் மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

 -முனியசாமி.

Comments