நொய்யலில் வெள்ளப்பெருக்கு!!

         -MMH 

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவார பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக தொடர் கன மழை பெய்து வருகிறது. 

இதனால், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆயிரக்கணக்கான ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து, நொய்யால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான, சித்திரை சாவடி தடுப்பணையில் இருந்து நொய்யல் ஆற்றிற்கு, கடந்த 7ம் தேதி, வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்மழை காரணமாக, நேற்று முன்தினம், வினாடிக்கு, 1,435 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று நொய்யல் ஆற்றில், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால், வினாடிக்கு 1,485 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பேரூர் படித்துறையில் உள்ள தற்காலிக தர்ப்பண மண்டபம் தண்ணீரில் மூழ்கியது. 

பேரூர் --- வேடபட்டி சாலையில், ஆற்று வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, நெடுஞ்சாலை துறையினரும், போலீசாரும், அச்சாலையில் போக்குவரத்தை தற்காலிகமாக தடை செய்தனர்.

நாளையவரலாறு செய்திகளுக்காக,

-சுரேந்தர்.

Comments