மூணாறில் கார் மரத்தின் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு!!

       -MMH 

மூணாறு பகுதியில் கடந்த புதன்கிழமை மதியம் 3 மணி அளவில் பழைய மூணார் KSRTC டிப்போ அருகில் கேரள பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு பக்கத்திலுள்ள மரத்தின் மீது மோதியது. 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் மரத்தின் ஒரு பகுதி உடைந்து அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு வாகனத்தின் ஓட்டுனரின் தலையில் விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். 

மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். இவர் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments