கோவில்பட்டியில்பேராசிரியை தாக்கிய கல்லூரி மாணவர்கள்!!

    -MMH 

      கோவில்பட்டியில் அரசு கலை - அறிவியல் கல்லூரியில், கணிதத்துறை  தலைவரான பேராசிரியரை மாணவர்கள் தாக்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை தலைவர், பேராசிரியர் சிவசங்கரன் என்பவர் மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார். மாணவர் ஒருவரின் காதல் குறித்து அவரது பெற்றோரிடம் பேராசிரியர் தெரிவித்தால் அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதில் காயமடைந்த பேராசிரியர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். இதனிடையே கல்லூரியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் அழித்து விட்டதாக பேராசிரியர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அதனை காவல்துறை மறுத்துள்ளது. கல்லூரி பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments