கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவை ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில் உலக அமைதி வேண்டி,சிறப்பு வழிபாடு!

 

-MMH

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவை ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில் உலக அமைதி வேண்டி நடைபெற்ற சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் திரளான பெண்கள் பங்கேற்று பக்தி கீர்த்தனைகள் பாடி வழிபாடு நடத்தினர். பகவான் கிருஷ்ண பரமாத்மா அவதரித்த நாள் உலகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையில்  இஸ்கான் அமைப்பின் கோவை ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில் கோவை மீனா எஸ்டேட் பகுதியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது   கிருஷ்ணன் ராதை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து உலக அமைதி வேண்டி ஹரே கிருஷ்ணா ஜெப யாகமானது நடத்தப்பட்டது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த 108 படிகளில் பக்தர்கள் 108 முறை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என வேண்டி பகவான் கிருஷ்ணரை வழிபட்டனர். மேலும் 108 வகையிலான உணவு பொருட்களை கொண்டு கிருஷ்ண பெருமானுக்கு  அபிஷேக ஆராதனைகளும் செய்யப்பட்டது.முன்னதாக 30க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று ஸ்ரீ கிருஷ்ண பெருமானை துதித்து கீர்த்தனைகள் பாடி அசத்தினர்.

- சீனி,போத்தனூர்.


Comments