ஆட்டிசம், கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை நிகழ்த்தும் பென்சியின் இசை நிகழ்ச்சி கோவையில் அரங்கேற்றப்பட்டது!!

   -MMH 

    ஆட்டிசம், கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை நிகழ்த்தும் முயற்சியாக கோவையில் ஸ்டெப்ஸ் குரூப்ஸ் நடத்திய மாற்றுத் திறனாளி பெண் பென்சியின் இசை நிகழ்ச்சி கல்லூரி மாணவர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது‌. 

ஸ்டெப்ஸ் குரூப்ஸ் மறுவாழ்வு மையம் மற்றும் ஸ்டெப்ஸ் சென்டர் ஃபார் சேலஞ்ச் ஆகியவை இணைந்து சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இதன் ஒரு நீட்சியாக ஆட்டிசம், கற்றல் குறைபாடு ஆகியவற்றிற்கு தொழில் சார் சிகிச்சை, பேச்சு சிகிச்சை சிறப்பு கல்வி மற்றும் பிசியோதெரபி போன்றவற்றை ஸ்டெப்ஸ் குரூப்ஸ் வழங்கி வருகிறது. இந்நிலையில்  ஸ்டெப்ஸ் குரூப்ஸ், டூண் பவுண்டேஷன் கோயமுத்தூர் ரோட்டரி வடக்கு மற்றும் கே.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரி ஆகியோர் இணைந்து மாற்றுத்திறனாளி சிறப்பு குழந்தைகளுக்கான இசை கச்சேரியை கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.இதில் சிறப்பு திறன் கொண்ட பிரபல பாடகி பென்ஸியின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. 

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை நிகழ்த்தும் முயற்சியாக நடைபெற்ற பாடகி பென்சியின் இசை நிகழ்ச்சி கல்லூரி மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது‌.முன்னதாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் ஸ்டெப்ஸ் குரூப்ஸ் நிறுவன தலைவர் கார்த்திக் ராஜாராம் தலைமை வகித்தார்.இதில் கல்லூரி முதல்வர் முனைவர் நாகராஜன்,பி.சி.ஏ.துறை தலைவர் ரஞ்சித்,ரோட்டரி கோயமுத்தூர் வடக்கு தலைவர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ஆட்டிசம், உள்ளிட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக பாடகி பென்ஸிக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக,

- சீனி,போத்தனூர்.

Comments