தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறும் இளைஞர் அதிரடி கைது! காவல்துறை நடவடிக்கை!!

     -MMH 

கோவை சூலூர் அருகே காடம்பாடி அருகே நேருநகர் பகுதியில் வாலிபர் ஒருவர் தனியா நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வாகனத்தில் வரும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து விசாரிக்க அப்பகுதி இளைஞர்களுடன் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 

அவர்கள் அந்த வாலிபர் வரும் சி. சி. டி. வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த வாலிபரை பிடிக்க பொது மக்கள் முயற்சி செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த அந்த வாலிபர் அந்த இளம்பெண்ணை வழிமறித்தார். 

அந்த வாலிபர் திடீரென அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயற்சி செய்ததார். அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம்போட்டார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அந்த இளம்பெண் பொதுமக்களிடம் கூறினார். மக்கள் அந்த வாலிபரை பிடிக்க விரைந்தனர். அப்போது சோமனூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

Please Subscribe This Channel to get current news ↓

அதில் அவர்தான் தனியே வரும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்த சூலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் விழுப்புரத்தை சேர்ந்த தாமோதரன் என்பதும், இவர் சோமனுர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. 

மேலும் இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகி இருந்ததும், புதுமாப்பிள்ளையான இவர் குடிபோதையில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது குறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments