"கலர் மாறுகிறது".. பெண்களுக்கான இலவச"பிங்க்" நிற பஸ்கள் சென்னையில் இன்று முதல் இயக்கம்!! மக்கள் குஷி!!

      -MMH 

பெண்களுக்கான இலவச நகர பேருந்துக்கள் பிங்க் கலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது... இந்த பேருந்துகளின் இயக்கத்தை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், இன்று தொடங்கி வைக்கிறார்.

முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, இலவச பஸ் பயணத்துக்கு முக்கியத்துவம் தருபவர்.. ஆட்சி பொறுப்பை ஏற்றதுமே பெண்களுக்கான இலவச பஸ் பயணத்துக்கு கையெழுத்து போட்டதே அதற்கு சாட்சியாக இன்றுவரை திகழ்கிறது.

இந்த இலவச பஸ் பயண அறிவிப்பினை எதிர்க்கட்சிகள்கூட அன்று கேள்வி கேட்டன.. வாக்குறுதியில் எத்தனையோ அறிவிப்புகளை சொல்லிவிட்டு, இந்த இலவச பஸ் பயணத்தை எதற்காக இத்தனை அவசரமாக அறிவிக்க வேண்டும் என்றும் விமர்சித்தன.. ஆனாலும், பெண்களுக்கு இப்படியான அறிவிப்பு அவசியம் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார்.. அதற்கான பலன்களையும் நடுத்தர மற்றும் ஏழ்மைநிலை பெண்கள் நேரடியாக பெற்றும் வருகின்றனர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆனாலும், தமிழ்நாட்டில் மாநகர அரசு பேருந்துகள் அனைத்தும் ஒரே கலரில் இயங்குவதால் பெணகளுக்கு இலவச கட்டண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.. அவசரத்தில் சில பெண்கள் இலவச பயணத்திற்காக டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர்.. சிலசமயங்களில் சில அரசு பஸ் கண்டக்டர்கள், பெண்களுக்கும் இடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டுவிடும்.. இந்த பிரச்சனைக்குதான் 

அதன்படி, பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் எளிதில் அடையாளம் காணும் வகையில், கட்டணமில்லா பயணச் சலுகை பேருந்துகளுக்கு பிங்க் கலர் பூசப்படும் என்றும் அதற்கான வேலைகள் மும்முரமாக நடப்பதாகவும் கூறியிருந்தது. அதன்படி, பிங்க் நிற பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலகம் அருகே போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் பிங்க் பேருந்துகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இந்த பேருந்துகளை தொடங்கி வைக்கிறார். மேலும் ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து பிற மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு 5 இணைப்பு மினி பேருந்துகள் இயக்கத்தையும் அவர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். பெண்களுக்கான இலவச நகர பேருந்துக்கள் பிங்க் நிறமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments