கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வீடு நேற்று பெய்த கன மழையால் இடிந்து விழுந்தது!!

    -MMH 

     கோவை மேட்டுபாளையம் சாலையில் உள்ள 69 வது வார்டுக்கு உட்பட்ட முத்துமாரியம்மன்  கோவில் வீதியில் வசித்து வரும் திருமதி விஜயா என்பவரின் வீட்டின் சுவர் நேற்று பெய்த கன மழையால் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இந்த தகவலை அறிந்த அப்பகுதி மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மாநில பொது செயலாளர் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி இவர் பாதிக்கப்பட்ட நபர் வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் அப்பகுதில் மழையினால் சேதமடைந்த பகுதியை பார்வையிட்டார்.

மேலும் கோவை வடக்கு தாசில்தார் அவர்களிடம், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு "போர்க்கால அடிப்படையில் நிவாரணம்வழங்க வேண்டும் என்று தொலைபேசியில்  வலியுறுத்தினார்"

உடனடியாக இரவு 11 மணி அளவில் கிராம நிர்வாக அலுவலரும், வருவாய்த்துறை அலுவலரும், நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட நபரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுத்தனர். மேலும் இந்த நிவாரண பொருட்கள் வழங்கிய நிகழ்வில் திமுக கிளை பொருட்பாளர்கள் ஜார்ஜ், கண்ணன்,கோவை ராவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments