போன் மூலமாக பெண்ணிற்கு மிரட்டல்! சைபர் கிரைம் போலீசார் விசாரணை!!

      -MMH 

       துடியலுார் பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவரது மொபைல் போன் எண்ணுக்கு 'லோன்' தருவதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. கடன் பெற விருப்பம் இல்லாததால், 'லிங்கை' மொபைலில் இருந்து அழித்துள்ளார். பின்னர், பத்து நாட்களுக்கு பிறகு 'லோன்' தொகையை செலுத்த வேண்டுமென அழைப்பு வந்துள்ளது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதற்கு, 'வாங்காத கடன் தொகைக்கு நான் எதற்கு பணம் செலுத்த வேண்டும்' என கூறியுள்ளார். பின்னர், லிங்கை பயன்படுத்தி அந்த பெண்ணின் குடும்ப புகைப்படத்தை 'மார்பிங்' செய்து, சமூக வலைதளங்களில் பரப்பி வந்துள்ளனர்.இது குறித்து, மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சுரேந்தர்.

Comments