பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 'மக்கள் சங்கமம் மாநாட்டு அலுவலகம்' கோவையில் திறப்பு!!

    -MMH 

   கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மக்கள் சங்கமம் மாநாட்டு அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் உபைதூர் ரகுமான் திறந்து வைத்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் "மக்களை சந்திப்போம்" என்ற பிரச்சாரம் ஜனவரி 26ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் மக்களை சந்திப்போம் எனும் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற உள்ளது.இந்நிலையில் கோவை கரும்புகடை பகுதியில் மக்கள் சங்கமம் மாநாட்டு அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் உபைதூர் ரகுமான் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மக்களை சந்திப்போம் என்ற பிரச்சாரம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தொண்டாமுத்தூர் தெற்கு டிவிசன் சார்பாக வருகின்ற ஆகஸ்டு 7ஆம் தேதி கரும்புகடை சாரமேடு ஷாஜி துணிக்கடை அருகில் மாபெரும் மக்கள் சங்கமம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் டிவிசன் தலைவர் அப்துல் ஹக்கீம், டிவிசன் செயலாளர் காசிம்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம்,கோட்டை மேடு டிவிசன் தலைவர் அப்பாஸ்,  மாவட்ட பிஆர்ஓ மெகாஜுதீன் ,ஏரியா தலைவர் காஜா உசேன், செயலாளர் மெடிக்கல் சபீர் ஜாவித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

- சீனி,போத்தனூர்.

Comments