கிருஷ்ணஜெயந்தி விழா!!

 

    -MMH

   கோவை: பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமான நேற்று உலகெங்கும்  கிருஷ்ணஜெயந்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை விளாங்குறிச்சி அருகில் சிவராம்நகர் ஆதி சிவாலயத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் சன்னதியில் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தார்கள். அப்போது பொதுமக்கள் தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்து கோவிலுக்கு அழைத்து வந்தது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-சுரேந்தர்.

Comments