அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா இன்று மிக சீறும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது!!

    -MMH 

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி அருகில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் விழா கடந்த வாரம் 30.07.2022 வெள்ளிக்கிழமை கால்நட்டி மிக சிறப்பாக இன்று 05.08.2022 வரை நடைபெற்றது. 

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து அம்மன் அருள் பெற்று சென்றனர்.

இதில் இன்று சிறப்பு அம்சமாக காலை முதலே பால்குட ஊர்வலம், சாமி ஆடி தீர்த்தம் எடுத்து வருதல், பொங்கல் வைத்து வழிபடுதல், யாக குண்டத்தில் முதலியவை இடம்பெற்று மிக சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-வேல்முருகன், தூத்துக்குடி.

Comments