வால்பாறை மக்களின் பரிதாப நிலை! கோரிக்கைகள் பல விடுத்தும் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்!!

      -MMH 

வால்பாறையில், அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்களால், பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி வருகிறது.வால்பாறை அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், பொள்ளாச்சி, கோவை, பழநி, சேலம் மற்றும் உள்ளூர்களுக்கு, 38 வழித்தடங்களில் பஸ் இயக்கப்படுகிறது. இது தவிர, நான்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. 

இந்நிலையில், நேற்று எஸ்டேட் பகுதிக்கு இயக்கப்பட்ட பஸ் (டிஎன் 43 என் 0498) என்ற பஸ் ஸ்டேன்மோர் சந்திப்பில் பழுதாகி நின்றது. இதனால் பயணியர் கடும் அவதிக்குள்ளாயினர்.அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, 'எஸ்டேட் பகுதியில் ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால் தான், பழைய பஸ்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது. ரோடு சரியில்லாததால் 'லீப்' கட்டாகியும், செல்ப் எடுக்காமலும் பழுதாகி விடுகின்றன. இருப்பினும், வழித்தடங்களில் தடையில்லாமல் இயக்கப்படுகிறது,' என்றனர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறையில், தனியார் பஸ் இயக்கப்படாத நிலையில், மோசமான நிலையிலுள்ள அரசு பஸ்களில், வேறு வழியின்றி மக்கள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனிடையே, ஊட்டி, கோவை, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் இயக்கப்பட்ட பழைய 'டப்பா' பஸ்கள் தான், வால்பாறையில் பல ஆண்டுகளாக இயக்கப்படுகின்றன. பெரும்பாலான பஸ்களில், பயணியருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. வழித்தடத்தில் இயக்க தகுதியில்லாத பஸ்களை இயக்குவதால், பயணம் செய்யும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பெரும்பாலான பஸ்களில் மழை காலத்தில் மேற்கூரை ஒழுகுவதால், பயணியர் குடைபிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், அரசு பஸ்களில் பயணம் செய்ய தயங்கும் பயணியர் தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்கின்றனர்.

இதுகுறித்து பல கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து பலரும் தங்களது செல்போன்களில் வால்பாறையில் தற்போது உள்ள பேருந்துகளின் நிலைமையை படம் எடுத்தும் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளே லைவ் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளனர் ஆனால் இது பற்றி   யாரும் கண்டு கொள்வதில்லை என்பதே இந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேதனையாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments