தமுமுக &மமக ஒருங்கிணைந்த கோவை மத்திய மாவட்டத்தின் செயல்வீரர் கூட்டம்!!

     -MMH 

7.8.2022 நேற்று காலை ரயில்நிலையம் அண்ணாமலை அரங்கத்தில் வைத்து தமுமுக மமக செயல்வீரர் கூட்டம் கோவை மத்திய மாவட்ட தலைவர் சர்புதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மமக மாநில பொருளாளர் உம்மர்  அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மாநில செயற்குழு, உறுப்பினர் 86 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அகமது கபீர், தமுமுக மாவட்ட செயலாளர் முஜிப் ரகுமான்,மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம்,தமுமுக மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் நூருதீன், ஷாகுல், சமூகநீதி மாணவர் இயக்க மாநிலத் துணைச் செயலாளர் அம்ஜத் அலிகான், இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை இன் மாநில துணைச் செயலாளர் ஜெயினுலாபுதீன், மமக மாநில செயற்குழு உறுப்பினர் ஜெம் பாபு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

நடைபெற்ற கூட்டத்தில்  எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:

1,எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் கோவை அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

 2,  இருபது வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ள சிறைவாசிகள் மற்றும் முஸ்லிம் சிறைவாசிகளை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

3,தமுமுக மமக அனைத்து கிளைகளிலும் கொடிக்கம்பம் ஏற்றுதல்

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

4,மற்றும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில்  கிளை கழக நிர்வாகிகள் முன்னாள் நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் 100நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டார்கள் என மத்திய மாவட்ட தலைவர் சர்புதீன் கூறினார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஜீப்ரஹ்மான், செல்வபுரம் கோவை.

Comments