கோவை சம்ஹிதா பள்ளியின் ஆண்டு விழா! அசத்திய பள்ளி குழந்தைகள்!!

 

-MMH

கோவை சம்ஹிதா பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், நிலம்,நீர்,காற்று என ஐம்பூதங்களை நாடகம்,நடன அசைவுகளுடன் அசத்திய பள்ளி குழந்தைகள். கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தி சம்ஹிதா அகாடமி பள்ளியின் 2022-23 ஆம் கல்வி  ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.ஐம்பூதங்களான நிலம்,நீர்,காற்று,நெருப்பு,மற்றும் ஆகாயம்  ஆகியவற்றின் கருத்து மற்றும் தகவல்களை மையமாக கொண்டு நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,பள்ளியின் முதல்வர் ராதா பள்ளியின்  செயல்பாடு மற்றும் மாணவ,மாணவிகள் சாதித்த சாதனைகள், குறித்து பேசினார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்,கடந்த கல்வியாண்டில் விளையாட்டு மற்றும் கலை,பண்பாட்டு துறையில் சாதித்த மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.அப்போது அவர்,தற்போதையை நவீன உலகத்தில் குழந்தைகளை வளர்க்கும் முறைகள் குறித்தும்,பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய நடகமுறைகள் குறித்தும் விளக்கி பேசினார்.தொடர்ந்து பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில், ஐம்பூதங்களான நிலம் நீர் நெருப்பு காற்று மற்றும் ஆகாயம் குறித்த நாடகம் மற்றும் நடனங்களை தத்ரூபமாக மாணவ மாணவிகள் மேடையில் அரங்கேற்றினர். 

தொடர்ந்து மாணவ,மாணவிகளின் தமிழக கிராமிய கலைகளாக கிராமிய பாட்டுகள் வில்லுப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவரும் விதமாகவும் சிந்திக்க தூண்டும் விதமாகவும் அமையப்பெற்றது..விழாவில் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக கர்னல் மோகன் தாஸ் நன்றியுரை வழங்கினார்.நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரிய,ஆசிரியைகள்,ஊழியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments