விளாத்திகுளத்தில் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்!!

 -MMH 

      தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் ரூ.2.75 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய தாலுகா அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையொட்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கீதாஜீவன் குத்துவிளக்கேற்றினார்.

இந்நிகழ்ச்சியில்  விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, விளாத்திகுளம் தாலுகா சசிக்குமார், வருவாய் ஆய்வாளர் மாடசாமி விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-முத்தரசு கோபி, ஸ்ரீவைகுண்டம்.

Comments