குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!! கோவில்பட்டியில் பரபரப்பு!!

 -MMH

கோவில்பட்டியில் 15வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்  போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் முத்து மாரியப்பன் (21). இவர் 15வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும், கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அந்த சிறுமியை கடத்தி திருமணம் செய்துள்ளார். 

இதுகுறித்து தகவலின்பேரில் கோவில்பட்டி யூனியன் சமூக நல அலுவலர் இந்திரா விசாரணை நடத்தினார். மேலும், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் முத்து மாரியப்பன் சிறுமியை கடத்தி திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்குப் பதிந்து முத்து மாரியப்பனை கைது செய்தார். 

 சமீபத்தில் தான் மத்திய அரசு திருமண வயது வரம்பு 21 உயர்த்தியது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments