இன்று அஞ்சல் நிலையத்தில் ஆதார் சிறப்பு முகாம்!!

 

   -MMH

    மேட்டுப்பாளையம் - காரமடை ரோட்டில் தலைமை அஞ்சல் நிலையம் உள்ளது. இங்கு இன்று முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்கள் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் புதிதாக ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்தல், விலாசம், போட்டோ மாற்றுதல் ஆகியவை திருத்தம் செய்யப்படும். ஆதார் அட்டை திருத்தம் செய்பவர்கள் முகவரி மாற்றம் குறித்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று வர வேண்டும். பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சான்று பெற்று, ரேஷன் அட்டை ஆகிய ஆவணங்கள் கொண்டு வர வேண்டும். குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க பிறப்பு சான்றிதழுடன், பெற்றோர் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும். இவ்வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சலக அதிகாரி நாகஜோதி தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments