அரசு பணியாளருக்கு அகவிலைப்படி உயர்வு! மாநில அரசு சூப்பர் அறிவிப்பு!!

       -MMH 

அரசு பணியாளர்களுக்கு அடித்த பம்பர் லாட்டரி – மாநில அரசு விடுத்த சூப்பர் அறிவிப்பு. மாநில அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்படுவதாக குஜராத் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவை கோலாகலமாக மக்கள் மற்றும் அரசாங்கம் கொண்டாடினர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்தி அறிவித்தார். இதனால் மாநில அரசு ஊழியர்கள் சுதந்திர தின விழாவை அதிகப்படியான சந்தோசத்துடன் கொண்டாடினர். இதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர படேல் சில அறிவிப்புகளை அறிவித்தார்.

அதாவது, குஜராத் மாநில அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்படுவதாக குஜராத் மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். அது மட்டுமின்றி தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று குஜராத் முதல்வர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநில அரசுகளை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் இது குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சிவகுமார்.

Comments