கார் விற்பனை நிலையத்தில் மோசடியில் ஈடுபட்ட நபர்! கைது நடவடிக்கையில் காவல்துறையினர்!!!

    -MMH 

         கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் அனீஸ் பிரசன்னா. இவர் கடந்த 2019 ஆம் வருடம் முதல் திருச்சி சாலையில் பிரசன்னா ஆட்டோமொபைல் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கியா கார்ஸ் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சரவணன் என்பவர் அக்கவுண்ட்ஸ் மேலாளராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் மேலாளர் சரவணன் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கம்ப்யூட்டரில் சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது நிறுவனத்தின் கணக்கில் இருந்து ரூ.42 லட்சத்து 98 ஆயிரத்து 100 ரூபாய் எடுக்கப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வங்கியை அணுகிய சரவணன், நிறுவனத்தின் வரவு செலவு குறித்து சரிபார்த்தபோது ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் 42 லட்சத்து 98ஆயிரத்து 100 ரூபாய் திருவண்ணா மலையில் உள்ள மூர்த்தி என்பவரது வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் அனீஸ் குமார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து துணை ஆணையர் பார்த்திபன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை செய்த சேலத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரது மகன் வெங்கடசுப்பிர மணியம் வேலை செய்து கொண்டிருந்தபோது நிறுவனத்திலிருந்து காசோலைகளை திருடிச் சென்றுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நின்ற வெங்கட சுப்பிரமணியம் ஆரணியைச் சேர்ந்த சிவாவிடம் தன்னிடம் காசோலை உள்ளதாகவும் அதனை பயன்படுத்தி பணம் எடுத்தாலும், நம்மை யாராலும் கண்டறிய முடியாது என கூறியுள்ளார்.

இதனை சிவா ஹோட்டலில் வேலை செய்த புதுச்சேரியைச் சேர்ந்த தினேஷ் பாபு என்பவரிடம் கூறியுள்ளார். வெங்கட சுப்பிரமணியம், சிவா தினேஷ் மற்றும் இவர்களது நண்பர் கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து திருவண்ணாமலை சேர்ந்த மூர்த்தி என்பவரை தொடர்பு கொண்டு ஷேர் மார்க்கெட்டில் பணம் செலுத்தினால் லாபம் கிடைக்கும் எனவும் தன்னிடம் உள்ள காசோலையை பயன்படுத்தி மூர்த்தியின் வங்கி கணக்கில் பணம் எடுத்துக் கொள்வதாகவும் கூறி, போலி கையொப்பமிட்ட வங்கி காசோலையை மூர்த்தியின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர்.

மேலும் அதிலிருந்து 22, லட்சத்து 98ஆயிரத்து, 100 ரூபாயை மட்டும் எடுத்து சிவா மற்றும் கார்த்திக் இருவரும் பகிர்ந்து கொண்டனர். மீதம் 20 லட்சம் ரூபாய் வங்கி கணக்கிலேயே இருந்துள்ளது. இதனுடைய திருவண்ணாமலை ஆரணி புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வலை வீசி தேடிய போலீசார் பதுங்கி இருந்த சிவா, கார்த்திக், தினேஷ் பாபு ஆகிய மூவரையும் கைது செய்தனர். 

மேலும் தினேஷ் வங்கி கணக்கில் இருந்து 20 லட்சம் ரூபாய், சிவா மற்றும் கார்த்திக் ஆகிய இருவரிடம் இருந்த 22 லட்சத்து 98ஆயிரத்து100 ரூபாய் பணம் என மொத்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். புகார் அளித்த 24 மணி நேரத்தில் மூவரையும் கைது செய்து மொத்த பணத்தையும் மீட்ட மாநகர குற்றப்பிரிவு போலீசார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வெங்கட சுப்பிரமணியத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments