உக்ரைன் போரால் நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு ஜார்ஜியா பல்கலைக்கழகம் வாய்ப்பு!!

      -MMH 

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திரவிடுதியில் சாட்சியாவில் மருத்துவக் கல்வி என்ற தலைப்பில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்காக ஜார்ஜியா பல்கலைக்கழகம் வழங்க உள்ள வாய்ப்பு குறித்த செமினார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.‌ 

கோகசஸ் பல்கலைக்கழகம், பெசலெண்ட் இன்ஸ்டிடியூட், மெடிக்கல் கேரியர் அகாடமி, டாக்டர்ஸ் ஹம் ஆகியவற்றுடன் இணைந்து பிக்மைண்ட்ஸ் கல்வி நிறுவனம் இந்நிகழ்ச்சியை கோவையில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் இயக்குனர்கள் அட்மிஷன் இயக்குனர்கள் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடினர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜார்சியா பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள், சாட்சியா மருத்துவக் கல்வி பெற ஒரு சிறந்த இடம் என்றும் ஆங்கில மொழியில் அங்கு மருத்துவக் கல்வி கற்றுத்தடம் படுவதாகவும் கூறினர். மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே அங்கு அட்மிஷன் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டனர். 

அத்துடன் உக்ரைன் போரால் அங்கிருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களை இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி சேர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர். நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோகுல்ராஜ்,வீரராஜ், சுதீப் விஸ்வநாதன், கிறிஸ்டோபர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments