பள்ளி மணவிகளுக்கான இரவு நேர பாட வகுப்பினை தடை செய்ய வேண்டும்!! இந்தியா மூவ்மெண்ட்-ன் மண்டல தலைவர் சஹானா!!

 -MMH 

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள எஸ்டிபிஐ அலுவலகத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட்-ன் மண்டல தலைவர் சஹானா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவராக காமிலா, செயலாளர் சாஜிதா பொருளாளர் மெஹர்நிஷா,துணை தலைவராக பைரோஜா மற்றும் சல்மா, இணை செயலாளராக பரீதா, தியானா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட தலைவர் முஸ்தபா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்தியா மூவ்மெண்ட்-ன் மண்டல தலைவர் சஹானா,கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.இந்நிலையில் இதற்கான தொடர் கண்டன போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை நடத்த உள்ளதாகவும்,அதே போல பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

மேலும் இரவு நேர பாட வகுப்பினை தடை செய்ய வேண்டும் எனவும்,தனியாரின் கல்வி நிறுவனங்கள் அரசின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும்,பள்ளி  கல்லூரிகளில்,மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்கள் எனவும்,மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் என பாடம் எடுத்தால் பாலியல் குற்றங்களை தடுக்க இது அமையும் என தெரிவித்த்தார். இந்த நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் மன்சூர், மற்றும் விமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

- சீனி, போத்தனூர்.

Comments