ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்துறை சார்பில் உலக தாய்ப்பால் தினவிழா கொண்டாடப்பட்டது!!

 -MMH 

சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது. இதை அடுத்து  ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா  MLA கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டி மற்றும் பாரம்பரிய உணவு தயாரித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா MLA பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். 

நிகழ்ச்சியில்  தாய் சேய் நலன் குறித்த பயிற்சி கையேடுகள் பணியாளர்கள் அனைவருக்கும் வழங்கபட்டன.

இவ்விழாவில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், சமுக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலம்,  வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி, ஒட்டப்பிடாரம் மேற்பார்வையாளர் ஜூலியட்,  மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-முனியசாமி.

Comments