கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஹெல்ப் டெஸ்க் எதற்காக தெரிந்து கொள்ளுங்கள்!!

    -MMH 

    கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 50க்கும் அதிகமான கோர்ட்கள் செயல்பட்டு வருகின்றன இந்த கோர்ட்டுகளுக்கு   நாள் தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான 

மக்கள் வந்து செல்லும் நிலையில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கும் மற்றும் சாட்சியளிக்க மக்களுக்கு எந்த தளத்தில் எந்த நீதிமன்றம் செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள சிக்கல் இதனால் சரியான நேரத்திற்கு கோர்ட்டுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹெல்ப் டெஸ்க் என்ற தகவல் மையம் மாஜிஸ்திரேட் கோர்ட் பில்டிங் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் அதாவது வழக்கு விவரம், நீதிமன்ற உத்தரவு, தீர்ப்பு விவரம், நகல் பெறுவதற்கான வழிமுறைகள், வழக்கறிஞர்களுக்கு இ பைலிங் பற்றிய சந்தேகம் தீர்த்து வைத்தல், இ ஸ்டாம்ப், மொபைல் போனில் இ கோர்ட் செயலி பதிவிறக்கம் உள்ளிட்ட  வழிமுறைகளை மக்கள் எளிதில் தெரிந்து  கொள்ளலாம் இந்த ஹெல்ப் டெஸ்க் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாளைய வரலாறு செய்திக்காக,

-M.சுரேஷ்குமார்.

Comments