இந்திய மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர யுக்ரேன் பல்கலைக்கழகங்கள் அழைப்பு!!

 

   -MMH

    யுக்ரேன் பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள் இந்திய மாணவர்களின் வகுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், "யுக்ரேன் பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள், வகுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதால், அபாயங்கள் இருந்தபோதிலும் ஒன்று கல்லூரி வளாகங்களுக்குத் திரும்ப வேண்டும் அல்லது தற்காலிகமாக இணையவழி வகுப்புகளில் சேர வேண்டும் அல்லது பிற நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் சேர வேண்டும் என்று இந்திய மாணவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில யுக்ரேனிய பல்கலைக்கழகங்கள், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட போர் மண்டலங்களில் அமைந்துள்ளன. அவற்றின் கட்டுமானங்கள் கணிசமாகச் சேதமடைந்துள்ளன. அவர்கள் கடைசி தேர்வாக, மாணவர்களை மாற்றுத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றன. யுக்ரேனிய பல்கலைக்கழகங்கள் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிலுள்ள சில நிறுவனங்களுடன் இணைந்துள்ளன. யுக்ரேனிய பல்கலைக்கழகங்களில் இருந்து மாற்றப்படும் மாணவர்கள் அங்கு தொடர்ந்து படிப்பார்கள்.

பெரும்பாலான யுக்ரேனிய பல்கலைக்கழகங்களுக்கான அடுத்த செமஸ்டர் செப்டம்பர் 1 தொடங்கும் என்பதால், மாணவர்கள் கட்டணம் செலுத்தி முடிவெடுக்க அடுத்த வாரம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சில பல்கலைக்கழகங்கள் இந்தியாவிலுள்ள தேசிய மருத்துவ கவுன்சிலுக்கும் யுக்ரேனில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் கடிதம் எழுதியதாக மாணவர்களிடம் தெரிவித்துள்ளன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஹரி சங்கர், கோவை வடக்கு.

Comments