கோயமுத்தூர் அசோசியேசன் ரியல்டர்ஸ் சங்கத்தினர் தமிழக அரசுக்கு நன்றி!

     -MMH 

ரியல் எஸ்டேட் துறையில் உள்ள பல்வேறு குறைகளை தீர்க்கும் வகையில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கோயமுத்தூர் அசோசியேசன் ரியல்டர்ஸ் சங்கத்தினர் கோவையில் தெரிவித்துள்ளனர்.

கோயமுத்தூர் அசோசியேசன் ரியல்டர்ஸ் எனும் கோயேரியா அமைப்பின் 10 வது ஆண்டு விழா கோவையில் உள்ள   தனியார் ஓட்டல் அரங்கில்  நடைபெற்றது. அமைப்பின் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கோயேரியா அமைப்பின்  புதிய லோகோ வெளியிடப்பட்டது. தொடர்ந்து அமைப்பின் தலைவர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது அவர், இந்த அமைப்பு நேசனல் அசோசியேசன் ரியல்டர்ஸ் அமைப்பின் பிம்பமாக இயங்கி வருவதாகவும், இந்த அமைப்பின் 10 ஆண்டுகால பயணம் குறித்து கோவை மக்களுக்கு தெரிய படுத்தவே இந்த அமைப்பின் பத்தாவது ஆண்டு விழா கோவையில் நடைபெறுவதாக தெரிவித்தார். ரியல் எஸ்டேட் துறை சார்ந்த வளர்ச்சிக்கு எங்களது அமைப்பின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவிப்பதாக கூறிய அவர் நலிவடைந்த மக்களுக்கு வீடு வழங்குவதில் பத்திர பதிவு தொகையை குறைத்து வழங்க வேண்டும் எனவும் வீட்டுமனைகளை பதிவு செய்வது போன்று அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கும் பத்திரபதிவை நீட்டித்து வரைமுறை செய்து அமுல்படுத்த வேண்டும் என்றார். 

ஒரு இந்தியா ஒரு உரிமம் என்ற திட்டத்தின் கீழ் ரியல் எஸ்டேட் துறைக்கு வழங்கினால் இத்துறை மேன்மையடையும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில், கோயேரியா அமைப்பின் நிறுவன தலைவர் ஜெயராமன், துணை தலைவர் வெங்கடேசன், செயளாளர் பிரதீஸ், இணை செயலாளர் மோகன், பொருளாளர் ரமேஷ் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments