ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு..!!

 -MMH 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் சென்ற 2 மாதங்களாக தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது.

இதனால் குரங்கு நீர் வீழ்ச்சியில் நேற்று 3வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நீர்வீழ்ச்சிக்கு போக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.

 இதேபோன்று பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்ததனால் அங்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து ஆழியாறு அணையிலிருந்து நேற்று 3வது நாளாக உபரி நீர் திறந்துவிடப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,364 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது.

 அணையிலிருந்து வினாடிக்கு 2540 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அத்துடன் புது ஆயக்கட்டு கால்வாய் வழியே தடுப்பணைகளுக்கு வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அவ்வாறு அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆழியாற்றின் இருகரைகளையும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

 ஆகவே ஆழியாற்றில் குளிக்கவோ, துணிதுவைக்கவோ போகக்கூடாது. இதேபோல் கால்நடைகளையும் ஆற்றுபகுதிக்கு அழைத்து செல்லகூடாது. இதனிடையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு இருக்கிறது. 

எனவே ஆற்றுக்கு செல்வது, தண்ணீர் ஓடும் தரைப்பாலத்தை கடந்து செல்வது ஆகிய செயல்களை தவிர்க்கவேண்டும் என வருவாய்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments