சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சிகள்! சென்னையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து மாற்றங்கள் என்னென்ன?

    -MMH 

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகிற 6, 11, 13-ந்தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சென்னை 75-வது சுதந்திர தின விழாவை வருகிற 15-ந்தேதி, சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 6, 11, 13-ந்தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம் வரை சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. 

அதன் விவரம் வருமாறு:- நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்படும். காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (என்.எப்.எஸ். ரோடு) வழியாக பாரிமுனையை வந்தடையலாம்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம். அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம். முத்துசாமி சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம். இந்த நடவடிக்கைகளுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறு சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

-வேல்முருகன், சென்னை.

Comments