தபால் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்!!

  -MMH 

    வேலூர் கோட்ட தபால் துறை சார்பில் பொது மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.முதன்மை தபால் அதிகாரி முரளி, மக்கள் தொடர்பு அலுவலர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபால் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தலைமை தபால் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் மக்கான் சிக்னல்வேலூர் வடக்கு ,தெற்கு போலீஸ் நிலையம் அண்ணா சாலை வழியாக சென்று மீண்டும் தபால் நிலையத்தில் நிறைவடைந்தது.

இதில் தபால்காரர்,தபால் நிலைய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-P. இரமேஷ், வேலூர்.

Comments