முன்னாள் பொள்ளாச்சி சார் ஆட்சியருக்கு மனித உரிமை விருது..!!

 -MMH 

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய வெள்ளி விழாவில், மனித உரிமைகள் செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட் ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் .காயத்ரி கிருஷ்ணனுக்கு முதல்வர்  மு.க. ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், பல்வேறு துடிப்பான செயல்பாடுகளால் பலரும் அறிந்தவராகவே இருக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்கள் மாற்றப்பட்டனர். அதில் பலரும் இளம் தலைமுறையினர். ஐஏஎஸ் முடித்து நேரடியாக மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டவர்களும் இருந்தனர். 

அப்போது, கோவை வணிகவரித்துறை மாவட்ட இணை ஆணையராகப் பதவி வகித்து வந்த இளம் ஐஏஎஸ் அதிகாரி காயத்ரி கிருஷ்ணன் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் பொள்ளாச்சி சார் ஆட்சியராகவும் இருந்தவர்.

அவர் மாவட்ட ஆட்சியராக பதவியேற்றது முதலே ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பல்வேறு பாராட்டுகளுக்கு உரியவர் ஆனார். பொள்ளாச்சியில் சாலை போடும் பணியின்போது, மரங்களை வெட்டாமல், அப்படியே அதனை வேரோடு வேறு இடத்துக்கு மாற்றும் திட்டத்தை மக்களின் உதவியோடு மேற்கொண்டு பாராட்டுகளை பெற்றார்.

கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட காயத்ரி முதுகலைப் பட்டம் பெற்றவர். திருமணமாகி, வெளிநாட்டில் வசித்து வந்த காயத்ரி கிருஷ்ணன், குழந்தை பிறந்த பிறகுதான், ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவரது ஆதரவாளர்கள், இவர் பெயரில் ஒரு டிவிட்டர் கணக்கைத் தொடங்கி அதில் இவரது சிறப்பான பணிகள் குறித்தப் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள். இவரும் பொதுமக்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களை பிரச்னைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காணும் பணியை மேற்கொள்வதில் திறமையாக செயல்பட்டு வருவதை செய்திகள் மூலம் மக்கள் அறிந்துள்ளனர்.

அவ்வப்போது யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி பெற்று வருவோருக்கு பல குறிப்புகளையும் அவர் விடியோ மூலம் வழங்கி வருகிறார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments