ஏ.ஐ.சி விண்ணப்பங்கள் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது!!

    -MMH 

     நாட்டில் உள்ள ஸ்டார்ட்  அப்கள் தொழில்முனைவோர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக நிறுவனங்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் ஏ.ஐ.சி விண்ணப்பங்கள்  வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.

நி ஆயோக், அடல் இன்னோவேஷன் மிஷன் மற்றும் ஏ.ஐ.சி ரைஸ் ஆகியோர் இணைந்து ஏ.ஐ.எம் ஃபார் இன்ஸ்டியூஷன்ஸ் (A.I.M FOR INSTITUTIONS) எனும் தலைப்பில் நிகழ்ச்சி கோவையில்  உள்ள உள்ள ஹோட்டல் பார்க் எலான்சாவில் நடைபெற்றது. ஏ.ஐ.சி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர் நாகராஜ் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில், ஏ.ஐ.சி.ரைஸின் , முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் மதன் ஏ செந்தில் , நிதி ஆயோக்கின் இயக்குனர் ரோஹித் குப்தா , அடல் இன்னோவேஷன் மிஷனின் இளம் வல்லுநர்கள் ப்ரித்வி , ஆஷிஷ் பாண்டே - மற்றும் ஏ.சி.ஐ.சி - இன் இளம் நிபுணர். அன்மோல் சேகல் ஆகியோர்  முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.. ஆந்திரா , கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சார்ந்த கல்வி நிறுவனங்களின் பல்கலைக்கழக உறுப்பினர்கள் மற்றும் கலை , மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரி பிரதிநிதிகள், கல்லூரிகளின் துணைவேந்தர்கள் , முதல்வர்கள் , தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். அடல் இன்னோவேஷன் மிஷன் ஒரு கல்வி நிறுவனத்தில் அடல் இன்குபேஷன் சென்டர் அமைப்பதற்கு ரூ . 10 கோடி மற்றும் அடல் சமூக புத்தாக்க மையம் அமைப்பதற்கு ரூ .2.5 வழங்குவதாக அறிவித்தது .மேலும் அடல் இன்னோவேஷன் மிஷன் குழு விண்ணப்ப நடைமுறையை குறித்து விளக்கினர். 

மேலும் புத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆதரவுகள் , நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதைப் புரிந்துகொள்வதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து கூறினர். இதில் கோயம்புத்தூரில் உருவாக்கப்பட்ட முதல் இன்குபேஷன் சென்டர் , இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த இன்குபேஷன் சென்டர் ஐக்கிய நாடுகளின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் கவனம் செலுத்துகிறது. இந்த நிகழ்ச்சியானது கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாட்டில் இன்குபேஷன் மற்றும் இன்னோவேஷன் சென்டர்களை நிறுவி நாடு முழுவதும் புதுமைத் திட்டங்களுக்கு உதவும். இது தமிழகத்தில் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும் என நம்பப்படுகிறது.

- சீனி,போத்தனூர்.


Comments