ஓட்டப்பிடாரம் மற்றும் கருங்குளம் வட்டார இயக்க மேலாளர், ஒருங்கிணைப்பாளர் விண்ணப்பங்கள் அறிவிப்பு!!

       ட்டார இயக்க மேலாளர் பதவிக்கு ஊதியம் ரூ. 15000/- வயது 18  பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிக பட்சம் 28 வயது இருக்க வேண்டும். கருங்குளம் மற்றும் புதூர் வட்டாரங்களில் வட்டார இயக்க மேலாளர் பணியிடம் காலியாக உள்ளது. இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். கணினி MS Office குறைந்தபட்சம் 6 மாதம் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். கணினி சார்ந்த கல்வி தகுதி பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள்  அனுபவம் பெற்று இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

வட்டார ஒருங்கிணைப்பாளர்  பதவி: 

வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஊதியம் ரூ. 12000/- வயது 18  பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிக பட்சம் 28 வயது இருக்க வேண்டும். கருங்குளம், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், கோவில்பட்டி, கயத்தார், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் ஆகிய வட்டாரங்களில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் மொத்தம் 33 காலியாக உள்ளது. இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். கணினி ms office  குறைந்தபட்சம் 6 மாதம் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச்சான்று, கணினி பயிற்சி பெற்றத்தற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எந்த ஒரு விண்ணப்பதையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை. காலை 10. 00 மணி முதல் 5. 30 வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம் - 628101, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு ஆஞ்சல் மூலமாகவோ 10. 08. 2022 (புதன்கிழமை) மாலை 5. 30 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். 

விண்ணப்ப படிவம்:

வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப் பணியிடத்திற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கான www. thoothukudi. nic. in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-முனியசாமி.

Comments