பந்தயசாலையில் தென்னீரா விழிப்புணர்வு நடைபயணம்!!

    -MMH 

பல்வேறு மகத்துவங்களை கொண்ட இந்த தென்னீராவை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த  கோவை பந்தய சாலையில் தென்னீரா விழிப்புணர்வு நடைபயணம் இன்று காலை நடைபெற்றது. 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பேரணியை ரூட்ஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறை இயக்குனர்  கவிதாசன் தொடங்கி வைத்தார். முன்னதாக உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின்   நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியன், துணை நிர்வாக இயக்குனர் ஸ்கை சுந்தரராஜ்  ஆகியோர் தென்னீராவின் மகத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். 

பேரணியானது பந்தய சாலை தாஜ் ஹோட்டல் அருகே ஆரம்பித்து மாவட்ட கலெக்டர் வீடு வழியாக  சென்று மீண்டும் தாஜ் ஹோட்டலை அடைந்தது. பேரணியின் போது தென்னீரா  நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பாதைகளை கையில் ஏந்தி வந்தனர். 

நிகழ்ச்சியில் வனம் இந்தியா பவுண்டேஷன் சுவாதி சின்னசாமி, பொருளாளர் விஸ்வநாதன் மற்றும் இயக்குனர்கள், அறங்காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  சிறப்பு விருந்தினர்களாக கே.ஜி. மருத்துவமனை மற்றும் பல சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர். இந்தத் தகவலை வனம் இந்தியா ஊடகத்துறை இயக்குனர் பல்லடம் டி.எம்.எஸ் தெரிவித்திருந்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments