மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டு ஆர்ப்பாட்டம்!!

 மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    -MMH 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்தாத, அமலாக்க துறை மூலம் எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதையொட்டி தூத்துக்குடியில் கலைஞர் அரங்கம் அருகே முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில அமைப்புச் செயலாளர் பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில் முன்னாள் மாவட்ட  தலைவர் முத்துக்குட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி,  தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ் வெள்ளப்பட்டி ஜேசுதாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் இக்னேஷியஸ், மணல்மேடு மீனவரணி மிக்கேல் குரூஸ்,  ஜெயமணி, பேரையா, ஜான் வெஸ்லி, பெத்துராஜ், எட்வர்ட் ராஜ், மடத்தூர் தனபால்ராஜ், முள்ளக்காடு மாரியப்பன், சுந்தர்ராஜ், சிவலிங்கம், முத்து, ரமேஷ், சாரதி, பிரபு, கௌதம், கார்த்தி, பாலன், ஜெயசிங், கோபி, செல்வராஜ், மகிளா காங்கிரஸ் செல்லதாய், சாவித்திரி, சற்குணம், ஆறுமுக கனி, ஜோதி, கிருஷ்ணம்மாள், சுந்தரி, மாரியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை வடபாகம் போலீசார் கைது செய்தனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments