உலக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!

    -MMH 

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று ஓட்டப்பிடாரம் வ. உ. சிதம்பரனார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பொருள் ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பள்ளி மாணவர் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மேரி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு போதை பொருள் ஒழிப்பு குறித்து மாணவிகளின் நடன நிகழ்ச்சியை எம். சி. சண்முகையா எம். எல். ஏ. தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய மாணவ-மாணவிகளின் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை எம். எல். ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவ, மாணவிகள் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக  சென்று பஜார் பகுதியில் உள்ள வ. உ. சி. சிலை முன்பு பேரணியை நிறைவு செய்தனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலர் பிரகாஷ், தாசில்தார் நிஷாந்தினி, மண்டல துணை தாசில்தார் ஆனந்த், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா, வருவாய் ஆய்வாளர் கற்பகவள்ளி, கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் உட்பட ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments