இந்து சமுதாய நல்லிணக்க அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது!!

   -MMH 

     அனைத்து சாதியினரையும் ஒருங்கிணைத்து அனைவரும் சமம் என்ற நிலையை எட்ட எங்களது அமைப்பு பாடுபட்டு வருகிறது என இந்து சமுதாய நல்லிணக்க அமைப்பின் அகில இந்திய அமைப்பாளர் ஷியாம் பிரசாத் தெரிவித்தார்.

இந்து சமுதாய நல்லிணக்க அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. ஆலோசனைக்கு பின் அதின் அகில இந்திய அமைப்பாளர் ஷியாம் பிரசாத் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்;

"அனைத்து சாதியினரையும் ஒருங்கிணைத்து அனைவரும் சமம் என்ற நிலையை எட்ட எங்களது அமைப்பு பாடுபட்டு வருகிறது. சாதி பாகுபாட்டை போக்க ஸ்ரீராமானுஜச்சாரியார், சுவாமி விவேகானந்தர், நாராயணகுரு மகரிஷி, தயானந்த சரசுவதி உள்பட பலரும் பாடுபட்டனர். மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் 36 சாதி தலைவர்கள் இணைந்து இந்து புதை குழியை மேம்படுத்தும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றன. குடிசை பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்கிறோம். கடந்த 1993&ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி மாதம்வரை இந்தியாவில் தூய்மை பணியின்போது இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 989 ஆக உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 218 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. நாடு முழுவதும் இந்த மரணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது  அமைப்பின் தமிழக அமைப்பாளர் ராஜமுருகானந்தம், கோவை மண்டல அமைப்பா£ளர் சிவலிங்கம், கோவை நகர அமைப்பாளர் வழக்கறிஞருமான திருலோக சந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

- சீனி,போத்தனூர்.

Comments