கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை வகுப்பு!!

    -MMH 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட ராசக்காபாளையம், விஜய் மஹாலில் 13.08.2022 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் பேரறிஞர் கட்டமைத்த கழகத்தின் வரலாறு சாதனைகளை மாநில சுயாட்சியின் அவசியத்தை திரு.சூர்யா சேவியர் அவர்களும், திரு. அமுதரசன் அவர்களும் உரையாற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு K.V.K.S.சபரி கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரை ஆற்றிட தலைமை செயற்குழு உறுப்பினர் திரு மு.க.முத்து அவர்கள் தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திரு ஆறுமுகம் திரு மகுடீஸ்வரன் திரு நிசாந்த், திரு சபரி கிருஷ்ணன்.

பொள்ளாச்சி நகர செயலாளர் திரு நவநீதகிருஷ்ணன் , கிணத்துக்கடவு தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர்கள் திரு செ.ஆ.துரை, திரு.கிரி கதிர்வேல்பெரிய நெகமம் பேரூர் கழக செயலாளர் திரு.ராசு (எ) முத்துக்குமார்

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

ஆகியோர் முன்னிலையில் பொள்ளாச்சி வடக்கு கி ஒன்றியம் இளைஞரணி அமைப்பாளர் திரு சாரதி நன்றியுரை ஆற்றிட பாசறை வகுப்பு இனிதே நடைபெற்றது. இப்பாசறை வகுப்பிற்கு 667 இளைஞர் அணி நிர்வாகிகள், இளைஞர்கள், மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments