போதை பொருட்கள் பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து கோவையில் பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்!!!

   -MMH 

தமிழகத்தில் கல்லூரி மனவர்களிடையே போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை மும்மரமாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் போலீசார் கஞ்சா விற்பனை கும்பலை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இந்த போதை பொருட்கள் பழக்கத்தினால் நரம்பு மண்டலத்தை பாதித்து சமூக குற்றங்கள் அதிகரிக்க வழி வகிக்கிறது. இந்த பழக்கத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் போதை பொருள் தடுப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் மக்களுக்கு துண்டு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், போதைகளால் ஏற்படக்கூடிய சம்பவம் குறித்து தத்துரூபமாக நடித்து காட்டி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

- சீனி,போத்தனூர்.

Comments