கோவையில் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!!

 -MMH

கோவையில் பகுஜன் சமாஜ் கட்சியின்,புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள ஹோட்டலில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் ஆலோசனையின்படி  மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சென்னியப்பன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவர்கள், பொது செயலாளர் என முக்கிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியி கோவை மாவட்டத்தில் வளர்வதற்கும்,கட்டமைப்பு உருவாக்குவதற்கும் அமையும் என மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிச்செல்வன் தெரிவித்தார். இதில் மாவட்ட தலைவர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments