ஓட்டப்பிடாரம் தொகுதியில் கால்நடை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா!!

    -MMH 

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஓசநூத்து கிராமத்தில் ரூபாய். 48 லட்சம் செலவில் கால்நடை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் எம். சி. சண்முகையா எம். எல். ஏ முன்னிலை வகித்தார். 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு கால்நடை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி வைத்து பணியை தொடங்கி வைத்தார். 

முன்னதாக ஓசநூத்து கிராமத்தில் விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட இலவச ஆடுகள் பராமரிப்பு மற்றும் வளர்ப்பு குறித்து பயனாளிகளிடம் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கேட்டறிந்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments