அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பான விநாயகர் சதுர்த்தி விழா!!

  -MMH 

கோவை மாவட்டம், சுந்தராபுரம், சாரதா மில் ரோடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வீதியில் சிறப்புடன் பொதுமக்களுக்கு அருள் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகணபதி மற்றும் ஆலமர விநாயகர் கோவிலில் சிறப்பான விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


இந்த பூஜையில் இந்தப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முழு முதற் கடவுளாம் விநாயகரின் அருள் பெற்றனர்.

இந்த சிறப்பு பூஜைக்கான ஏற்பாட்டினை கோவிலில் நிர்வாகிகள் மற்றும் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர். கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments