கழிவு பொருட்கள் மேலாண்மை தொடர்பில் ஜவுளி மறுசுழற்சி துறை முக்கிய பங்கு வகிப்பதாக ஜவுளி மறுசுழற்சி துறை சார்ந்த தொழில் அமைப்பினர் தெரிவிப்பு!!

    -MMH 

      நூற்பாலைகளில் இருந்து வெளியேறும் பஞ்சு கழிவுகளையும், நாடு முழுவதிலும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் இருந்து பெறப்படும் வேஸ்டு துணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய துணிகள் உள்ளிட்டவற்றை கொண்டு மறுசுழற்சி செய்து மில்கள் மூலம் நூல்கள் தொடர்ந்து கைத்தறி, விசைத்தறி, நிட்டிங் யூனிட்டுகள் மூலம் துணியாக மாற்றி மறுசுழற்சி முறையில் மீண்டும் துணி மற்றும் ஆடை வகைகள் பயன்பாட்டுக்கு வருகின்றன. 

கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ஜவுளி மறுசுழற்சி குறித்த மாநாடு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. ஜவுளி மறுசுழற்சியில் சிறந்த நடைமுறைகளை உருவாக்கவும் இதில் உள்ள தொழில் வாய்ப்புகள் மற்றும் துறை தொடர்பான தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளும் விதமாக நடைபெற்ற இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் மறுசுழற்சி செய்வோர், கழிவு மேலாண்மை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாநாட்டின் நோக்கம் குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கட் பிரதிப் பட்டேல், சேவியோ மற்றும் ராஜேஷ் ஆகியோர் கூறுகையில் தற்போது பெரும் சவாலாக உள்ள கழிவு பொருட்கள் மேலாண்மை தொடர்பில் இந்த ஜவுளி மறுசுழற்சி துறை முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஜவுளி மறுசுழற்சி துறையில் தொழில் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக இந்ததுறையில் சிறந்த நடைமுறைகளை உருவாக்க இது போன்ற மாநாடுகள் நடத்தபடுவதாக தெரிவித்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments