தமிழகத்தில் இனி மது விற்பனையில் புதிய முறை? டாஸ்மாக் நிறுவனம் அளித்துள்ள விளக்கம்!!

தமிழ்நாட்டில் மதுவை கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்வதற்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என டாஸ்மாக் நிறுவனம் கூறியுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியாவில் பல மாநிலங்களில் கண்ணாடி பாட்டில்களில் மது விற்பனை செய்யும் நடைமுறையே தற்போது புழக்கத்தில் உள்ளது. இப்படி இருக்கையில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு 1996ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இது உடல் நலனுக்கு தீங்கானது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு பதில் மனு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தற்போது வரை மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய எந்த ஒரு திட்டமும் எதுவும் இல்லை என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மதுவை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்வது குறித்து தமிழ்நாடு அரசு முடிவு எடுத்து, அது தொடர்பாக அரசாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசின் கொள்கை முடிவை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர முடியாது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சிவக்குமார்.

Comments