தூத்துக்குடி மாநகராட்சியில் 1100 பணியிடங்கள் அறிவிப்பு!!

      -MMH 

தூத்துக்குடி மாநகராட்சியில் 1100 தற்காலிக பணியாளர்கள்  நியமனம் செய்வது தொடர்பாக மாநகர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. ஆணையாளர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:

தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வருவதற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இரண்டு வேன்களை வழங்கியுள்ளது. அதனை இயக்குவதற்கு 2 ஓட்டுநர்களை நகர்புற வாழ்வாதார மையம் மூலம் பணியமர்த்துதல். அதே திட்டத்தில் தேவைப்படும் பிளம்பர் பணியிடத்தை நிரப்புதல் ஆகிய பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக 5-8-2008 அன்று தரம் உயர்த்தப்பட்ட போது அருகில் இருந்த ரூரல், சங்கரபேரி,மீளவிட்டான், முத்தையாபுரம் மற்றும் அத்திமரப்பட்டி ஆகிய 5 பஞ்சாயத்துகள் சேர்த்து 60 வார்டுகள் உள்ளடக்கியதாகும். மாநகரட்சிக்கான அடிப்படை பணிகளுக்குத் தேவையான பணியாளர்கள் அரசிடம் இருந்து அனுமதி அளிக்கப்படவில்லை.

எனவே நிர்வாக அனுமதியின்படி நகர்புற வாழ்வாதார மையம மூலம் தினக்கூலி அடிப்படையில், துப்புரவு பணியாளர்கள் பள்ளி கழிவறை பராமரிப்பு, தூய்மைப் பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், சூப்பர்வைசர்கள், கணினி இயக்குபவர்கள் என 1100 தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

தொடர்ந்து மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி இடங்களை கண்டறிந்து பாதுகாக்கவும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமனம் செய்தல், போல்பேட்டை 60 அடி சாலையில் 49 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும். மாநகராட்சி மைய அலுவலகம், மண்டலங்கள் மற்றும் பூங்காக்களில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுப வர்களுக்கு ஊதியம் வழங்க ஒப்புதல் அளித்தல் மற்றும் நிர்வாக பணிகளுக்கான அனுமதி அளித்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments