வ.உ.சி 151வது பிறந்த நாள் கொண்டாட்டம்!!

 -MMH 

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் நினைவு இல்லத்தில் உள்ள அவரது முழுஉருவ வெண்கல சிலைக்கு அதிமுக  வடக்கு மாவட்டம்  முன்னாள் அமைச்சர்    கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர். கடம்பூர் ராஜி தலைமையில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2005 ஆண்டு வ.உ.சி க்கு   ரூ.80 லட்சம் மதிப்பிலான மணி மண்டபம் திருநெல்வேலி  அமைக்கப்பட்டது. அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான  அரசு வ.உ.சி  அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார்.

வ.உ.சி அவர்களுக்கு 12.12.1961  நினைவு நிலையம் முன்னாள் அமைச்சர்  கக்கன் தலைமையில்   முன்னாள் முதல்வர்  காமராஜ்  அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

இவ்விழாவில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் திரு என்.தளவாய்சுந்தரம் மற்றும்  முன்னாள் அமைச்சர் திருமதி வளர்மதி அவர்கள் முன்னாள் அமைச்சர் ப.மோகன் அவர்கள், முன்னாள் அமைச்சர்   கடம்பூர் ராஜி அவர்கள் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பண்டியன், கழக கொள்கை பரப்பு துனணச் செயலாளர் சரவணப் பெருமாள், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments