பல்லாவரம் - துரைப்பாக்கத்தை இணைக்கும் 200 அடி ரேடியல் சாலையில் குவிந்திருக்கும் குப்பைகள்! அகற்றுமா தாம்பரம் மாநகராட்சி!!

     -MMH 

     தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 23-வது வார்டில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகம் முதல் பல்லாவரம் – துரைப்பாக்கம் 200அடி ரேடியல் சாலை சிக்னல் வரை புத்தேரி கரை சாலை முழுவதும்  பொதுமக்கள், 

உணவக உரிமையாளர்கள் மற்றும் இறைச்சிக்கடைக்காரர்களால் வீசி செல்லும் குப்பைகள், பழைய உணவு பொருட்கள் மற்றும் கோழி இறைச்சிகழிவுகள் தினம் தினம் மலை போல் குவிந்து வருகின்றது. 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் இப்பகுதியில் பன்றிகள்மற்றும் தெரு நாய்கள் நூற்றுக்கணக்கில் சுற்றி வருகின்றன.  

இதனால் சாலை முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரசீர்கேடு ஏற்படுகிறது. 

தினமும் ஆயிரக்கணக்கான அலுவலகம் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிசெல்லும் மாணவர்கள் இந்த சாலையை மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்.  

தாம்பரம் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அவ்வப்போது சுத்தம் செய்தும் பயனளிக்கவில்லை.


எனவே தாம்பரம் மாநகர சுகாதார அதிகாரிகள் இந்த குப்பைபிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

-செந்தில் முருகன், சென்னை தெற்கு.

Comments